Home /News /tamil-nadu /

விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது

காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல்

காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல்

காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல் கொண்டு வந்த பையில் துருப்பிடித்த நிலையில் பழைய துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
கோவை விமான நிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் தாங்கல் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்டார். இதையடுத்து, ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் இன்று காலை பெங்களூர் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்துள்ளார். பெங்களூர் வழியாக அமிர்தசரஸ் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.   அவரது உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.

அப்போது அவர் கொண்டு வந்த பையில் துருப்பிடித்த நிலையில் பழைய துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்டதுடன் அவரை பீளமேடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது துப்பாக்கிக்கு உரிய அனுமதி எதுவும் இல்லாதது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி


காலை முதல் 8 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில், கேரள காங்கிரஸ் பிரமுகர்  மீது ஆயுத சட்டத்தின் கீழ் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் மறைந்த மனைவியை நினைத்து கண்ணீர் விட்ட அமைச்சர்
Published by:Murugesh M
First published:

Tags: Airport, Coimbatore, Congress, Gun

அடுத்த செய்தி