கோவையில் மனு அளிக்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம், மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று மனு வாங்காததால் அதிமுக எம்.எல்.ஏகள் ஆட்சியரை அச்சுறுத்தும் விதத்தில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் மனு அளிப்பதற்காக வந்தனர். கோவையில் தடுப்பூசி மையங்களை அதிகரிக்க வேண்டும் , அரசு விழாக்களுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் நிதியில் ஒதுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யக்கூடாது என்ற கோரிக்கைகள் தொடர்பான மனுவுடன் வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அமர்ந்த நிலையில் மனுவை வாங்கிய போது எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட சிலர், ‘எழுந்து நின்று மனுவை வாங்க மாட்டீர்களா’ என அதட்டும் விதமாக பேசினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று மனுவை வாங்கினார்.
இதையும் படிங்க: தளர்வா? கடுமையா? - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
மனு அளித்த பின் அதிமுக எம்.எல்.ஏ க்களுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகளை புறக்கணிக்கும் சூழலை தவிர்க்க வேண்டும் எனவும்,மாவட்டத்தில் பல்வேறு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, பணிகளை ரத்து செய்ய கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருக்கின்றோம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அப்போது, மாவட்ட ஆட்சியரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதட்டும் விதமாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வேலுமணி எவ்வித பதிலையும் அளிக்காமல் கிளம்பி சென்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.