Home /News /tamil-nadu /

கொள்ளையடித்த பணத்தில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் - எடப்பாடி பழனிசாமி கேலி

கொள்ளையடித்த பணத்தில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் - எடப்பாடி பழனிசாமி கேலி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியை தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும். திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை விட்டுவிட்டு, அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் இப்பொது அங்கு அமைச்சர்களாக இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மேலும் படிக்கவும் ...
  உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு கொடுக்க கோவையில் 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ் வந்து இறங்கியுள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? அதிமுக கொண்டு வந்த திட்டங்களை இந்த அரசு முடக்கி வருகின்றது .அம்மா பெயரில் இருக்கும் திட்டங்களை எல்லாம் திமுக முடக்குகிறது.  சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை,கொள்ளை , திருட்டு நடைபெறுகின்றன. தன்னை தானே சூப்பர் முதல்வர் என்று சொல்லிகொள்கிறார்.

  கோவை அமைதி பூங்காவாக இருந்த ஊர். இந்த ஊரை கலவர பூமியாக மாற்ற திமுக சதி திட்டம் தீட்டி இருக்கிறது. 5 கட்சிக்கு போய் வந்தவரைதான் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக திமுக நியமித்து இருக்கிறது.  அடிக்கடி மின்வெட்டுக்கு காரணம் கேட்டால்,அணிலை காரணம் சொல்லுவார். மின்தடை, மின்வெட்டு என்பது வேறு வேறு. மின்வெட்டை கேட்டால் மின் தடைக்கு பதில் சொல்கின்றார். அதிமுக இருந்த வரை 24 மணி நேரம் மின்சாரம் இருந்தது. சரியான மின் உற்பத்தி இல்லை. அடிக்கடி மின்வெட்டால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

  இதையும் படிங்க: பரோட்டா தயாரித்து, தெலுங்கில் வாக்கு சேகரித்த பாஜக மாநில பொறுப்பாளர்


   

  70 லாரிகளில்  ஹாட் பாக்ஸ் லோடு வந்து இறங்கி இருக்கிறது என்றும்  திமுகவினர் கொடுத்தால் வாங்கிகொள்ளுங்கள், அது கொள்ளையடித்த பணம்தான். ஓட்டை மட்டும் இரட்டை இலைக்கு போடுங்க என்று  பேசினார்.

  திமுக ஆட்சியில், காவல் துறை ஏவல் துறையாக இருக்கிறது. போலீசார் தங்களை மாற்றிகொள்ள வேண்டும். இதற்கான தண்டணையை மக்கள் வெகு விரைவில் கொடுப்பார்கள். அமைதி பூங்காவாக இருக்கும் கோவையில் கலவரத்தை செய்ய முற்பட்டால் அவர்களை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் . மக்களுக்கு பாதிப்பு என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

   

  வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏன் இன்னும்  1000 ரூபாய் கொடுக்க வில்லை என கரூரில் உதயநிதியிடம் பொதுமக்கள்  கேட்கின்றனர். 4 ஆண்டு காலம் பாக்கி இருக்கு என்று உதயநிதி செல்கின்றார். கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் இதுவரை கொடுக்க வில்லை. கல்வி கடன் ரத்து செய்யவில்லை. டீசல், பெட்ரோல் விலையை குறைக்கின்றேன் என்றார்கள் இதுவரை குறைக்க வில்லை.

  இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் முதல்வர் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார்: செயல்படுத்துவதில்லை - சீமான் குற்றச்சாட்டு


  நகைகடன் தள்ளுபடி என பொதுமக்கள் நகையை பார்த்து விட்டு கவர்ச்சிகரமாக திட்டம் அறிவித்தார். இதை நம்பி மக்கள் நகையை அடகு வைத்தார்கள். ஓட்டு வாங்கிய பின்னர் இப்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என்று சொல்லி இருக்கின்றார். 13 லட்சம் பேருக்கு மட்டும் தள்ளுபடி கிடைத்துள்ளது. 35 லட்சம் பேர் நகையை மீட்க அபராதத்துடன் வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் விமர்சித்தார்.

   

  2010ல் நீட் வந்தது என்ற உண்மையை ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துவிட்டார். அப்புறம் எதுக்கு விவாதம் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி,  நீட்டை ரத்து செய்ய சட்ட போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. உச்ச நீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட நீதிபதிகளி்ல் இருவர் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி விட்டனர். மறுசீராய்வு மனு வேண்டாம் என அன்றை மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் அன்றைய மத்திய அரசு மறு சீராய்வு மனு போட்டதால் நீட் வந்தது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் நீட் தேர்வு வர காரணம் என்று கூறியவர், தீர்ப்பை நகலை மக்களிடம் காட்டினார்.

  மேலும் படிக்க: திமுக கொடுத்த 517 தேர்தல் வாக்குறுதியில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை - அண்ணாமலை


  மேலும் பேசிய அவர்,  திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி. அது கார்ப்பரேட் கம்பெனி. அந்த  கம்பெனியை உதயநிதியிடம் கொடுக்க பார்க்கின்றனர். அந்த கம்பெனியை தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும். திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை விட்டுவிட்டு, அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர் இப்பொது அங்கு அமைச்சர்களாக இருக்கின்றனர். பணம் படைத்தவர்கள் அங்கு சென்றும் அமைச்சர்களாகி இருப்பதற்கு காரணம் அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி். அங்கு போய் இவர்கள் முதலீடு செய்கின்றனர் என்று விமர்சித்தார்.

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Coimbatore, Edappadi palanisamy, Local Body Election 2022

  அடுத்த செய்தி