புத்தாண்டையொட்டி வாசகத்துடன்கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா" என்றும் time to lead என்றும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய்க்கு அரசியல் மீது எப்போதும் ஒரு பார்வை இருந்தே வருகிறது. இதன் காரணமாக முந்தைய காலகட்டங்களில் அவர் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்தார். தலைவா என்று படத்திற்கு பெயர் வைத்து time to lead என்ற குறிப்பு இடம் பெற்றதால் அவரது தலைவா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும், சமீப காலங்களாக நடிகர் விஜய் தனது திரைப்படங்கள் மூலமும், திரைப்படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் பேசி வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர்கள் 161 பேர்பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். இது ஒருசில பிரதான அரசியல் கட்சிகளை விட அதிகமாகும்.
இந்நிலையில், கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜய் ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட மாணவரணியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டரில் , 2022 புத்தாண்டு துவக்கம் எனவும் புவியில் உமது ஆட்சி நடக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜய் , தனது மன்றத்தினரை தேர்தலில் போட்டியிட பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அரசியல் வசனங்களுடன் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1640 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Coimbatore