ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு காரணம் அன்று தந்தை
பெரியார் போட்ட விதை என
கோவை சூலூரில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார். காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீதான மரியாதை கூடிக்கொண்டே செல்வதாகவும் அவர் கூறினார்.
கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு எனவும் தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை எனவும் தெரிவித்தார் . குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார் எனவும், ஆதிக்க சக்திகளை தான் அவர் வெறுத்தார், பிராமணீயத்தை தான் அவர் வெறுத்தார், பிராமணர்களை வெறுக்கவில்லை எனவும் சிவக்குமார் பேசினார்.
இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், மருத்துவர், எஞ்சினியர், வழக்கறிஞர் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு காரணம் அன்று தந்தை பெரியார் போட்ட விதைதான் எனவும் சிவக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
காலங்கள் கூட கூட பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கின்றது எனவும், அவர் மீது விமர்சனர்களும் வந்து கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் விருதுகள் பெற்ற தமிழறிஞர்கள் இருவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.