புரட்சி தமிழன் என்ற அடைமொழியை விட"இனமுரசு" என்ற அடைமொழி திராவிட மாடலுக்கு துணையாக நிற்பவன் என்று வருவதால் தனக்கு சரியாக இருக்கும் என நடிகர் சத்யராஜ்
கோவையில் நடைபெற்ற
பெரியார் புத்தக அறிமுக விழாவில் தெரிவித்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தக அறிமுக விழா நடைபெற்றது. இதில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன் , எழுத்தாளர் பாமரன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
புத்தக அறிமுக விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், புரட்சி தமிழன் என்ற அடைமொழி எனக்கு பொறுத்தமில்லை, நான் ஒரு புரட்சியும் செய்யவில்லை . "இனமுரசு" சத்யராஜ் என்கின்றனர், திராவிட மாடலுக்கு துணையாக நிற்பவன் என்பதால் இனமுரசு என்பது சரியாக இருக்கும் என தெரிவித்தார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமை தனம் என்பதில் இருந்துதான் கடவுள் மறுப்பை பெரியார் பேசுகின்றார் எனத்தெரிவித்த அவர்,பெரியாராக நடிப்பதே கஷ்டமாக இருந்தது, பெரியாராக இருப்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.
பெரியார் பட சூட்டிங்கின் போதுமுட்டையும், தக்காளியும் தன் முகத்தில் வீசினார்கள என்றும் , அந்த வாசம் 10 நாள் வரை இருந்தது எனவும் தெரிவித்த சத்யராஜ், பெரியார் இவற்றை எல்லாம் தாங்கி கொண்டு மனிம நேயத்துடன் உழைத்துள்ளார் .மொழி எது வேண்டுமோ அதை படித்து கொள்ளலாம் எனவும், கேரளாவில் வேலைக்கு போக எதுக்கு இந்தி படிக்கனும் என பேசினார்.
மேலும் படிக்க: அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேச்சு: இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவு
திராவிட இயக்கம்தான் தமிழ்மொழி பற்றை தனக்கு ஊக்குவித்தது எனவும் தெரிவித்தார். சாஸ்திரம், சம்பிரதாயம்,பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் இதெல்லாம் மனத்திற்கு குடைச்சல் கொடுக்கும் மனவிலங்கு என தெரிவித்த அவர்,இந்த மனவிலங்குகளை உடைக்க ஓரே ஆயுதம் பெரியார் சிந்தனைகள்தான் எனவும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் மூட நம்பிக்கைகள் பல்வேறு பெயர்களில் உள்ளே புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நடிகர் சத்தியராஜ் பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.