• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வளர்ப்பு நாய்க்கு துன்புறுத்தல்: சிசிடிவி காட்சியைக் கொடுத்த தங்கை கணவனின் காலை உடைத்தவர் கைது

வளர்ப்பு நாய்க்கு துன்புறுத்தல்: சிசிடிவி காட்சியைக் கொடுத்த தங்கை கணவனின் காலை உடைத்தவர் கைது

தாக்கப்பட்ட நபர்

தாக்கப்பட்ட நபர்

கோவையில் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதால் தங்கை கணவரின் காலை உடைத்த சதீஷ் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • Share this:
கோவை சிட்கோ அருகே பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தனது வீட்டில் வளர்க்கும் நாயை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக  அப்பகுதி மக்கள் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து  விலங்குகள் நல ஆர்வலர் பிரதீப் என்பவர் அங்கு சென்று விசாரித்த போது வளர்ப்பு நாயை சதீஸ்குமார் அடித்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. சதீஷ் வீட்டின் அருகில் வசித்து வந்த அவரது தங்கை மணிமேகலை வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை விலங்குகள் நல ஆர்வலர் பிரதீப் கேட்ட போது அவர்கள் கொடுத்தனர்.

இதையடுத்து விலங்குகள் நல ஆர்வலர் பிரதீப் சிசிடிவி காட்சிகளுடன் இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். சதீஷ்குமார் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பபட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வளர்ப்பு நாயை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை விலங்குகள் நல ஆர்வலர்களிடம் கொடுத்த தங்கை மணிமேகலை மற்றும் தங்கை கணவர் நவீனிடம் நேற்று சதீஷ்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தங்கை மணிமேகலையை சதீஷ்குமார் தாக்கியபோது அவரது   கணவர் நவீன் தடுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த குக்கரால் நவீனைத் தாக்கியதில் அவரது கால் உடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போத்தனூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக  மணிமேகலை புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் காவல் துறையினர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: