9 வயதில் 9 சிறுகதைகள் - கோவையில் ஆச்சர்யப்படுத்தும் 4-வகுப்பு மாணவி

Youtube Video

கோவை தொண்டாமுத்தூர் அருகே 4ம் வகுப்பு மாணவி, 9 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  கோவை மாவட்டம் உலியம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் - ராஜலட்சுமி தம்பதியரின் இளைய மகள் ஹரிவர்ஷினி. 9 வயதான அவர், 4ம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தையில் இருந்தே தாயிடம் கதைகள் கேட்டு வளர்ந்த ஹரிவர்ஷினி, புத்தகங்களை தேடிப் படிக்க தொடங்கினார். கதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்க, பிறரிடம் கதை சொல்லி வந்தார்.

  சிறுமியின் ஆர்வத்தை கண்ட பெற்றோர், அவரை சிறுகதைகள் எழுதும் குழுவில் சேர்த்தனர். அங்கு கதைகள் எழுதுவது, கதை கூறுவது குறித்து பயின்றார். இதன் பிரதிபலனாக சிறுகதை எழுத தொடங்கிய சிறுமி ஹரிவர்ஷினி, இதுவரை 9 கதைகளை எழுதியுள்ளார். ''குகைக்குள் பூதம்'', ''காண்டாமிருகம்'', ''மேக்கப் போட்ட விலங்குகள்'' என 9 சிறுகதைகளையும், நகரின் 9 முக்கிய இடங்களுக்குச் சென்று வெளியிட்டுள்ளார்.

  அம்மாவிடம் கதை கேட்ட பிறகே, கதை எழுத தமக்கு ஆர்வம் வந்ததாகவும், தமது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் அனைத்தையும் தமது சகோதரி வர்ஷினி வரைந்துள்ளதாகவும் கூறுகிறார் ஹரிவர்ஷினி.

  தமது மகளுக்கு இளம் வயதிலேயே கற்பனை சக்தி அதிகம் இருந்ததாகவும், அதை நல்ல வழியில் கொண்டு செல்லவே கதை எழுத ஊக்கப்படுத்தியதாகவும், சிறுமியின் தாய் ராஜலட்சுமி தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இன்னும் அதிக சிறுகதைகள் எழுத திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறுமி ஹரிவர்ஷினி, விரைவில் எழுத்தாளராக மாறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: