• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

கோவை மாணவியின் மரணம் குறித்து  தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
    கோவையில் 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி  முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் மனு  மீதான விசாரணை 24 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாஸ்மின் சார்பில் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    அப்போது பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என கோவை  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மாணவியின் மரணம் குறித்து  தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: