• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது

கோவை மாணவி தற்கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பெங்களூருவில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி முதல்வரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். 

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள், ஆர்.எஸ். புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில்  பள்ளி இயற்பியல் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.

ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களுரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு  பள்ளி முதல்வர் அழைத்து வரப்படுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: