கோவையில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில குழந்தைகள் நல ஆணையம் மாணவியின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி , தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாநில குழந்தைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டது. குழந்தைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி , ஆணைய உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவ மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் குழந்தை நல ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் தற்கொலை சம்பவம் தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் வழங்கவுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.