கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சனிக்கிழமையும் இறைச்சிக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி இன்று கடைகள் மூடப்பட்டுள்ளன. கோவையில் இறைச்சிக்கடைகள் இயங்காது என்பதை அறியாத சிலர், காலையில் கறி வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்களின் வீடுகளில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் கட்டாயம் இடம்பெறும். ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமைகளில் மீன், இறைச்சியை மொத்தமாக வாங்கி வந்தனர். இதனால் சனிக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் அபாயம் உள்ளது.
இதையடுத்து சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.