முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் - சிறுவன் உயிரிழப்பு

கோவையில் அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல் - சிறுவன் உயிரிழப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கோவை அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 11 ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் மருத்துவமனையில்  பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினர் அப்பள்ளியின் அருகே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர், மூன்று பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

Also Read: உண்டியல் சேமிப்பில் இலவச மாஸ்க்.. சிறுவனுக்கு குவியும் பாராட்டு

இதில் ஆலாந்துறையை சேரந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமார் மட்டும் தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் குத்தியதால் மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பள்ளியில் படித்த 17 வயது முன்னாள் மாணவர் உட்பட  மூன்றுபேரை கைது செய்து  விசாரணைக்கு பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ந்தனர்.

Also Read:  வாட்ஸ் அப்பில் பரவிய போட்டோ.. ஷாக்கான உதவி வேளாண்மை பெண் அலுவலர் – மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

First published:

Tags: Crime News, Death, Government school, School students