கோவையை அடுத்த, கோவை புதூர் பகுதியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர், ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக 13 வது குண்டம் இறங்கும் விழா கடந்த திங்கட்கிழமை (25.4.22) நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கையில் அக்னி சட்டி எடுத்து நடனமாடியபடி நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். மேலும் கோவில் நிர்வாகியான சித்தர்சாமி எனும் பாலகிருஷ்ணன் கையில் கத்தியுடன் மேளதாளத்திற்கு ஏற்றமடி நடனமாடியபடி கையில் இருந்த கத்தியால் தலையில் வெட்டிக்கொண்டார்.
தலையில் இருந்து வெளியேறிய ரத்தத்துடன் பூசைகள் செய்த சாமியார் பின்னர் தீக்குண்டத்தில் இறங்கினார். அவரை தொடர்ந்து பக்தர்கள் பலரும் அக்னி சட்டி , காவடி மற்றும் அலகு குத்தியபடி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தீக் குண்டம் இறங்கினர்.
Must Read : வீசி எறியும் பாட்டில்களால் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.. மதுக்கரை வனத்தில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
அப்போது, பக்தர்கள் வளர்க்கும் இரண்டு குதிரைகளையும் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தியது காட்சி அங்கிருந்த பக்தர்களை பதபதைக்க வைத்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.