ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை செய்கிறார் - அர்ஜூன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை செய்கிறார் - அர்ஜூன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை செய்கிறார் - அர்ஜூன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தன் கடமையை செய்கிறார் - அர்ஜூன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் கடமையை செய்கின்றார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை தேர் நிலைத்திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் 5 அடி உயர விநாயகர் சிலை தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பூசை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப விநாயகர் சதுரத்தி கொண்டாடப்படுகின்றது. கொரோனா நோய் தீர்ந்திட வேண்டும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகும் வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை.

விநாயகர் சதுர்த்தி விழா விவகாரத்தில் முதலில் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது, பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்  தமிழக அரசு வழங்கியது. விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

எனினும், விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல விநாயகர் கோவில்கள்  மூடி இருப்பது வருத்தம் அளிக்கின்றது என தெரிவித்த அவர், திரையரங்கு, பூங்கா என எல்லாம் திறக்கப்பட்டுள்ள நிலையில் , சில   நிபந்தனைகளுடன் குறிப்பிட்ட விநாயகர் கோவில்கள் அனுமதித்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

நாங்கள் கூட்டமாக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்கவில்லை என்று தெரிவித்த அவர், சொந்த  இடத்தில் வைத்திருக்கின்ற சிலைகளை நாங்களே ஒரு சிலர் சென்று கரைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டோம். அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்போம் .

Also read: தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு!

சட்டமன்றத்தில் விநாயகர் சிலையை தடை செய்வது அரசின் நோக்கமல்ல என்பதை முதலமைச்சர்  ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்கின்றார், நாங்களும் விதிமுறைகளுககு உட்பட்டு வழிபாடு நடத்துகின்றோம். திமுக ஈவேரா மாதிரி இல்லை, அண்ணாதுரை பிள்ளையார் சிலையையும்  உடைக்க மாட்டேன், அதற்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் என்று சொன்னவர்.

விநாயகர் சதுர்த்திக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவையில்லை. இந்து அமைப்புகளை அழைத்து பேசி இன்னும் சுமூகமாக விழாவை நடத்தி இருக்கலாம், தமிழக  முதல்வராக ஸ்டாலின் அவரது  கடமையை செய்கின்றார், நாங்கள் எங்களது வழிபாட்டு உரிமையை  நிலைநாட்ட வழிபாடு நடத்துகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Esakki Raja
First published:

Tags: Arjun Sampath, News On Instagram, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி