முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசு - தென்னை விவசாயிகள் எதிர்ப்பு

தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசு - தென்னை விவசாயிகள் எதிர்ப்பு

தென்னை விவசாயிகள்

தென்னை விவசாயிகள்

GST | தேங்காய் எண்ணெய்க்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீத ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு  கொங்கு மண்டல தென்னை விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

Pollachi News : கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எண்ணெய் பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில் இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் தேங்காய் எண்ணைக்கு 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரியை உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டது .மத்திய அரசின் இந்த முயற்சி தென்னை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளது ஹோட்டல்களும் சரிவர இயங்காத காரணத்தினால் தேங்காய் தேக்கமடைந்து  வீழ்ச்சி அடைந்துள்ளது 25 ரூபாய்க்கு மேல் விற்பனையான தேங்காய் தற்போது 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

அதேபோல கொப்பரை தேங்காய் விலை குறைந்து கொண்டே வருகிறது. கொப்பரைக்கு கிலோவிற்கு 150 ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்த்தும் போது தேங்காய் எண்ணெய் விலை பல மடங்கு உயரும். இதனால் சாதாரண மக்கள் தேங்காய் எண்ணையை வாங்கி பயன்படுத்த முடியாத  நிலை ஏற்படும். மேலும் தேங்காய் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளது.

Also Read : 6 மாசத்துக்கு முன் ‘கோபேக் மோடி’ இப்ப ‘வெல்கம் மோடி’ - திமுகவை விமர்சித்த டி.டி.வி தினகரன்

எனவே மத்திய அரசு உடனடியாக இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாமாயில் இறக்குமதி வரியை 2% குறைத்துள்ளதால் பாமாயில் விலை குறைய வாய்ப்புள்ளது. உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிற பாமாயில் எண்ணெயை பொதுமக்கள் உபயோகப்படுத்துவார்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத தேங்காய் எண்ணையை வாங்க பொதுமக்கள் முன்வரமாட்டார்கள்.

உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்க்கு 18 சதவீத வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்.  தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தால் தென்னை விவசாயம் பாதிக்கும். தென்னை  சார்ந்த மரம் ஏறும் தொழிலாளர்கள், தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து  தொழில்களும் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு தேங்காய் எண்ணெய்க்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் .மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு இந்த முயற்சியை கை விடவில்லை என்றால் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

செய்தியாளர் : சக்திவேல், பொள்ளாச்சி

First published:

Tags: GST, Pollachi