Home /News /tamil-nadu /

சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் - காவல்துறை வழக்குப் பதிவு

சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக மாணவரை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் - காவல்துறை வழக்குப் பதிவு

மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்ததற்காக 11ம் வகுப்பு மாணவரை தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான கலாதரன். இவரது 16 வயது 2வது மகன் (மிதுன்) அதே பகுதியில் உள்ள சி.எம்.எஸ் என்ற தனியார் பள்ளியில் பயாலஜி பிரிவில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.

கால்பந்து வீரராகவும் மிளிர்ந்து வரும் சிறுவன், கோவை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் நீட் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பள்ளி திறந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், மாணவருக்கு தைக்கப்பட்ட சட்டை இறுக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Also Read : நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்

இந்நிலையில் பள்ளிக்கு சென்ற போது, அங்கு வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் என்பவர், சட்டை ஏன் இறுக்கமாக அனிந்துள்ளாய்  என மாணவரை கேட்டுள்ளார். அதற்கு மாணவர் விளக்கமளித்த போதும், சமாதானம் அடையாத ஆசிரியர் அவரை அறைந்ததோடு, அவரை குனியவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மாணவருக்கு காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

Also Read : ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்ட நாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன்... பெயர்தான் காரணம் என குற்றச்சாட்டு

இது தொடர்பாக கலாதரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணம்பட்டி போலீசார் ஆசிரியர் சிவ ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Coimbatore, Kovai

அடுத்த செய்தி