ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் பூனைகளுக்கு வளைகாப்பு... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

கோவையில் பூனைகளுக்கு வளைகாப்பு... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

பூனைகளுக்கு வளைகாப்பு

பூனைகளுக்கு வளைகாப்பு

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கருவுற்ற பூனைகளுக்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வண்ண வளையல்கள், பலாகார சீர்வரிசையுடன் கோவையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றுள்ள இந்த வளைகாப்பு விழா, 2 வளர்ப்பு பூனைகளுக்கானது. ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ஸ்மிருதி என்பவர், 3 பர்ஸியன் வகை பூனைகளை வளர்த்து வருகிறார். பார்த்த உடன் எடுத்து கொஞ்ச தோன்றும், பொசு பொசுவென இருக்கும் ஜீரா மற்றும் ஐரிஸ் எனப்படும் இந்த இரண்டு பெண் பூனைகளும், கர்ப்பமாக இருப்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பூனைகளின் மீது கொண்ட அலாதி அன்பின் காரணமாக, அவற்றிற்கு வளைகாப்பு நடத்த உரிமையாளர் ஸ்மிருதி முடிவு செய்துள்ளார்.

இதற்காக, 2 பூனைகளின் கழுத்திலும் வண்ண மணிகளை கட்டி புத்தாடையுடன், பல்வேறு வண்ணங்களில் வளையல்கள், ரப்பர் பேண்டுகள் மற்றும் மாலை போன்றவை அணிவிக்கப்பட்டன. தாய் வீட்டு சீர் வரிசையாக தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட் போன்றவற்றை வைத்ததோடு, பூனைகளுக்கான பிரத்யேகமான சாக்லேட்டுகளும் ஊட்டி விடப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி மஞ்சள், குங்குமம் வைத்தால் அவற்றை பூனைகள் உண்ண முயல்வதால், அவற்றிற்கு மாற்றாக ரப்பர் பேண்டுகளை அணிவித்து, உறவினர்களுடன் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதாக உரிமையாளர் ஸ்மிருதி தெரிவிக்கிறார். பூனையின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணிக்க உதவி வரும், மருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையிலேயே, சிறிய இடத்தை விழா மேடையாக மாற்றி நடந்த வளைகாப்பில் கேக் வெட்டப்பட்டது. .

Also Read : திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

இந்த பர்ஸியன் வகை பூனைக்குட்டி ஒன்றின் விலையே அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது. செல்லப் பிராணிகளுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி வந்த நிலையில், தற்போது அவற்றிற்கு வளைகாப்பு விழா கொண்டாடும் அளவிற்கு, மனிதர்கள் மற்றும் செல்ல பிராணிகள் இடையேயான பிணைப்பு அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.

செய்தியாளர் : ஆரோக்கிய ஜெரால்டு, கோயம்புத்தூர்

First published:

Tags: Coimbatore