முழு ஊரடங்கால் கோவையில் கேரம், செஸ் போர்டு விற்பனை அதிகரிப்பு... பெற்றோர்கள் நிம்மதி...

Youtube Video

முழு ஊரடங்கு காரணமாக கேரம்போர்டு, செஸ் போன்று வீட்டிற்குள்ளேயே விளையாடக் கூடிய உபகரணங்கள் கோவையில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளும் செல்போன், வீடியோ கேம் தவிர்த்து, கேரம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கொரொனா ஊரடங்கால், சுற்றுலா தலம், விளையாட்டு மைதானங்கள், பூங்கா போன்றவை மூடப்பட்டு உள்ளதால் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சில குழந்தைகள் செல்போன் மற்றும் வீடியோ கேமில் மூழ்க்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், சில குழந்தைகள் ஆன்லைன் கேம்களில் மூழ்கினர். ஆனால், தற்போது கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயே விளையாடும் கேரம்போர்டு, செஸ் போன்று விளையாட்டுகளின் பக்கம் சிறுவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

மேலும், பெற்றோர் வீட்டிலேயே இருப்பதால், கில்லி, பல்லாங்குழி, லூடோ போன்ற விளையாட்டுகளை கற்றுக் கொடுப்பதாகவும் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஊரடங்கில் இருந்தே, குழந்தைகள் செல்போனுக்கு அடிமையானதாக பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவிக்கின்றனர். அதை தவிர்க்க வலியுறுத்தினால் கோபம் கொள்வதாகவும் கூறுகின்றனர். இருப்பினும், கண் பார்வை உட்பட உடல் ஆரோக்கியம் கருதி, குழந்தைகளை கேரம் போன்ற விளையாட்டுகளை திசை திருப்பியதாக தெரிவிக்கிக்கின்றனர்.

மேலும் படிக்க...  அலுவலகத்தில் இருந்தப்படியே மின்சாரத்தை துண்டிக்கும் நவீன சாதனம்... கல்லூரி மாணவிகள் அசத்தல்

தற்போது, கோவையில் கேரம், செஸ் போர்டு உட்பட வீட்டிலேயே விளையாட்டு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக, விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியிருந்த குழந்தைகள், தற்போது உள்ளரங்க விளையாட்டுகளின் பக்கம் திருப்பியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: