Home /News /tamil-nadu /

என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?.. அமைச்சர் முன்னிலையில் கோவை திமுக செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு!

என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?.. அமைச்சர் முன்னிலையில் கோவை திமுக செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு!

மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்கு பொய்யான தகவலை முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமைக்கு  கொடுத்ததுதான் காரணம் என குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்கு பொய்யான தகவலை முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமைக்கு  கொடுத்ததுதான் காரணம் என குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்கு பொய்யான தகவலை முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமைக்கு  கொடுத்ததுதான் காரணம் என குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

கோவையில் நடந்த ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பொய் தகவல்களை கூறி சீட் கிடைக்காமல் செய்து விட்டார் என  மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மீனா ஜெயக்குமார் ஆவேசமாக அமைசர் முன்னிலையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராகவும் மீனா ஜெயக்குமார் முன் நிறுத்தப்படுவார் எனவும் திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திமுக தலைமை வெளியிட்ட பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம்பெறவில்லை.

மாநகராட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே 57 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில்  தேர்தல் அலுவலகம் அமைத்து திமுகவிற்காக  பிரச்சாரம் மேற்கொண்டு வந்த மீனா ஜெயக்குமார் தலைமை கொடுக்காததால் விரக்தி அடைந்திருந்தார்.

இதையும் படிங்க: வெற்றியின் சூத்திரம்... செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் வரலாறு காணாத வெற்றியினை திமுக பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் இன்று  கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த  திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று இருந்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய மீனா ஜெயக்குமார், தனக்கு கவுன்சிலர் சீட் கிடைக்காமல் போனதற்கு பொய்யான தகவலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  நா.கார்த்திக் தலைமைக்கு  கொடுத்ததுதான் காரணம் என குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார்.

"உன்னோட பொண்டாட்டிக்கு சீட் கிடைக்கனும் என்றால் கேட்டுட்டு போ, அதற்காக என்னோட வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என மேடையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கு எதிராக காட்டமாக பேசினார். இதை திமுகவில் ஒரு தரப்பினர் கைதட்டி வரவேற்றனர்.

இதனிடையே பேச்சின் இடையே  தலையிட்ட மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,ஏதாவது புகார்கள் இருந்தால் கடிதமாக கொடுங்கள், தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என சமரசம் செய்தார். தொடர்ந்து மீனா ஜெயக்குமார் பேச முயன்ற பொழுது கட்சி நிர்வாகிகள் அவரை பேச விடவில்லை. திமுக வடக்கு மாவட் பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன் எழுந்து சென்று, மீனா ஜெயக்குமாரிடம் இனி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க: சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... போலீசார் தீவிர விசாரணை

மீனாஜெயக்குமார் பேசுவதற்கு கார்த்திக் ஆதராவளார்கள்  எதிர்ப்பு தெரிவித்தை தொடர்ந்து, பாதியிலேயே மீனா ஜெயக்குமார் பேச்சை முடித்துக்கொண்டார். கோவை மாவட்டத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றியை திமுக கூட்டணி பெற்றிருக்கும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலேயே பெண் நிர்வாகி ஒருவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசி , தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் மேயர் வேட்பாளராக தேர்தலுக்கு முன்பே மீனா ஜெயக்குமார் பெயர் அடிபட்டு வந்த நிலையில் அவருக்கு வாய்ப்பே கொடுக்காத நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவரது மனைவிக்காக, தனது வாய்ப்பை தடுத்து விட்டதாக கூறியிருப்பது குறிப்பிடதக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: Coimbatore, DMK

அடுத்த செய்தி