Home /News /tamil-nadu /

எங்க தலைக்கு தில்ல பார்த்தியா.. போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர்களின் இன்ஸ்டா ரீல்ஸ்.. அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

எங்க தலைக்கு தில்ல பார்த்தியா.. போலீஸ் ஸ்டேஷனில் சிறுவர்களின் இன்ஸ்டா ரீல்ஸ்.. அறிவுரை வழங்கிய ஆய்வாளர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி காவல்நிலையத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த சிறுவர்களை போலீஸார் அறிவுரை செய்து அனுப்பி வைத்தனர்.

    பொள்ளாச்சியில் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வருவதுபோல் வீடியோவை சினிமா பாணியில் இன்ஸ்டாகிராமில்  வீடியோவை பதிவிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் இரண்டு சிறுவர்கள்  “ நீங்க இங்க எப்படியோ எங்க ஊர்ல நாங்க தெரியல்லன்னா இரண்டு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்ற சினிமா பட வசனத்துடன் வீடியோ எடுத்து  இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.

    Also Read: 500 ரூபாய் ஃபைன் இங்க கட்டுனா 300தான் - ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ்

    பின்னர் இவர்கள் இருவரும் கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்  ராமதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைசாமி இருவரும் சிறுவர்கள்  வீட்டுக்கு நேரில் சென்று படிக்கும் வயதில் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று பெற்றோர்கள் முன்னிலையில்  அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.

    Also Read:  காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை.. பொள்ளாச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    மேலும் இருவரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் நடந்து கொள்வோம் என்று மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருவதால் தங்களின் தவறை உணர்ந்த சிறுவர்கள் இந்த வீடியோவை பதிவிட்டு இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பு உடையதாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : ம.சக்திவேல் ( பொள்ளாச்சி )
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Instagram, Kids Videos, Police station, Pollachi, Viral Videos

    அடுத்த செய்தி