Home /News /tamil-nadu /

பாஜக சித்தாந்த்திற்கு ஆதரவானவர்கள் மீது மாநில அரசு கைது நடவடிக்கை - வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

பாஜக சித்தாந்த்திற்கு ஆதரவானவர்கள் மீது மாநில அரசு கைது நடவடிக்கை - வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

BJP Vanathi Srinivasan | பா.ஜ.க சித்தாந்த்திற்கு ஆதரவானவர்கள் மீது மாநில அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகின்றது  என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்ட மன்ற அலுவலகத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ  வானதி சீனிவாசன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது, கடந்த வாரம் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது  எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கோவை மக்களுக்கான மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவு படுத்த நடவடிக்கை இல்லை எனபதையும்,ஒரு வருடத்திற்கும் மேலாக புதிய சாலைகள் போடப்படாமல் இருப்பதையும் பதிவு செய்தேன்.

சட்டமன்றத்தில் என்னைபேச விடாமல் பல்வேறு துறை  அமைச்சர்கள் வரிக்கு வரி இடையூறு செய்தனர். நான் சட்டமன்றத்தில் பேசியது தொடர்பான வீடியோக்களை கூட அரசிடம் இருந்து பெற முடியவில்லை. ஆனால்  அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றது என்று தெரிவித்த அவர்,தமிழக  சட்ட பேரவை நிகழ்வுகள்  முழுமையாக நேரடி ஒளிப்ப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்..

பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை ஆனால்  கொலுசு மட்டும் கிடைத்தது என்று பேசினேன். அதில் கொலுசு என்ற வார்த்தையை மட்டும்  நீக்கிவிட்டனர் என தெரிவித்தார். சிறு குறு தொழில்களை ஊக்கபடுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லைதமிழக பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தமிழக முதல்வரை விமர்சனம் செய்த நபர் கைது குறித்த கேள்விக்கு, பாஜக சித்தாத்திற்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க ஆதவாளர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஏபிவிபி அமைப்பின் சுப்பையா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது புகார் கொடுத்த பெண்ணே சமரசம் ஆகி விட்டோம் என்ற பின்னரும் நடவடிக்கை தொடர்கின்றது .

Also Read : ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமைகளாகும் இளைஞர்கள்.. தடை செய்ய முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சுப்பையா செய்த செயலை ஆதரிக்கின்றீர்களா என்ற கேள்விக்கு, அந்த தவறை ஆதரவு  கொடுக்க வில்லை எனவும், சுப்பையா மீதான வழக்கில்கூடுதல் வழக்கு பிரிவு போடப்பட்டு இந்த அரசு பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவர் செய்ததுதப்பா இல்லையா என்ற விவகாரத்திற்குள் செல்ல வில்லை. அரசாங்கம் ஏன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது, விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை எனவும்,கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததை செய்ய முடியவில்லை என தெரிவித்த அவர், ஆனால் மத்திய அரசு நிதி வருவாயை பகிர்ந்து அளித்துள்ளது. 24 சதவீதம் உயர்ந்த வரி வருவாயை தமிழகத்திற்கு வழங்கி இருக்கின்றது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்திற்கு கொடுக்கின்றது, ஆனால் மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க  எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

 
Published by:Vijay R
First published:

Tags: BJP, Coimbatore, Vanathi srinivasan

அடுத்த செய்தி