சி.வி.சண்முகத்தின் பெர்ஃபாமென்ஸ் சரியில்லை தோற்றார்.. பாஜக மீது பழிப்போடுவதா - பாஜக எஸ்.ஆர்.சேகர் கேள்வி

எஸ்.ஆர்.சேகர் - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க பா.ஜ.க வலியுறுத்தல்

  • Share this:
பா.ஜ.க குறித்து அ.தி.மு.க  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி எனவும், இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தோற்று போனதாக  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு  பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அளித்த பேட்டியில், “முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசிய கருத்து கூட்டணியில் சண்டை உருவாக்கும் முயற்சி என குற்றம் சாட்டினார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார்,தேர்தலில் தோற்ற பின் பா.ஜ.க மீது குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது எனவும், அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள்ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் இதற்கு பதில் செல்ல வேண்டும் , அப்போதுதான் குழப்பம் இல்லாமல் இருக்கும் என தெரிவித்தார்.

Also Read:அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க கூட்டணிதான் காரணம் - சி.வி.சண்முகம் நிர்வாகிகளிடம் குமுறல்

சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்க வில்லை என கூறி, தனக்கு வாக்களித்த  87403 மெஜாரிட்டி  மக்களையும் சி.வி.சண்முகம்  அவமானப்டுத்துகின்றார் என கூறிய எஸ்.ஆர்.சேகர் , பல முன்னாள் அமைச்சர்கள் வெற்றி பெற்று நிலையில் , கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சி.வி.சண்முகம் சரியாக    பெர்ஃபாமென்ஸ் செய்யாததால்  தோற்றதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெறும் 14 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுகளை மெஜாரிட்டி மக்களுடன் ஒப்பிடுவது அவர்களை அவமானப்படுத்துவது போன்றது என கூறிய அவர், தன்னுடைய செயலற்ற தன்மையை, தன்னுடைய பெர்ஃபாமென்ஸ்  கோளறுகளை பா.ஜ.க மீது சி.வி.சண்முகம்  தூக்கி போடுகின்றார் என தெரிவித்தார்.

Also Read: சி.வி.சண்முகம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. இந்தியா முழுவதும் 300-க்கு மேல சீட் வாங்கியிருக்கோம் - ராகவன் பதிலடி

பா.ஜ.கவை வசைப்பாடுவதை ஏற்க முடியாது என கூறிய அவர்,அ.தி.மு.க தலைமை இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும், இந்த கருத்தை அ.தி.மு.க தலைமை ஏற்க வில்லை எனில்,  சி்வி சண்முகம் மீது நடவடிக்கை அக்கட்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.5 வருடம் மந்திரியாக இருந்து சரியாக  பெர்மான்ஸ்  காட்டி இருந்தால் சிறுபான்மையினர் வாக்களித்து இருப்பார்கள் என கூறிய அவர், பொது வெளியில் இந்த கருத்தை சி.வி்.சண்முகம்  சொன்னதால் அதிமுக இதற்கு பதில்  சொல்லி ஆக வேண்டும்” என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: