கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பாஜகவினர் மோடியின் புகைப்படத்தை மாட்டி அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், அலுவலகத்திற்குள் மோடியின் படத்தை மாட்டினர். இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு எனவும் மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டினர். இதனால் பாஜகவினருக்கு அலுவலக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் மோடியின் புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இத்துமீறி அரசு அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி பாஸ்கரை ஆலாந்துறை போலிசார் அதிகாலையில் கைது செய்து, காலை 5 மணியளவில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : சுரேஷ் (கோவை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.