• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்துக்கு நல்லது - வானதி சீனிவாசன்

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்துக்கு நல்லது - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

  • Share this:
மத்திய அரசின் பொருளாதார   கொள்கைகளுக்கு எதிரானவர்களை தமிழக அரசின் பொருளாதார குழுவில் தமிழகஅரசு சேர்த்துக்கொள்ளும் என்றால், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்துதான் செயல்பட வேண்டும் அப்படி செயல்பட்டால்தான் நல்லது என பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிகவும் எதிர்பார்த்த டாஸ்மாக் கடை குறைப்பு ஒரு வார்த்தை கூட பேசப்பட வில்லை என தெரிவித்தார். மேலும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கவர்னர் உரையில் பேசப்படவில்லை எனவும், இது பற்றி முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும் முதலமைச்சர்  ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது என தெரிவித்தார்.

Also Read: ஸ்டாலினை ஆலோசனைக் குழுத்தலைவர் என அழைக்கலாமா - அர்ஜூன் சம்பத் கேள்வி

பொறுப்பான அரசாக இந்த அரசை பார்க்கின்றோம் என கூறிய அவர், பல்வேறு திட்ட பணிகள் வேகமாக நடைபெற வேண்டிய காலம் இது என தெரிவித்தார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும். மத்திய அரசுடன் இணைந்து  வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் மாநில அரசு வெள்ளை அறிக்கை கொடுத்து ,மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Also Read: கொரோனாவால் வருமான இழப்பு - தனியார் மோகத்தைவிடுத்து அரசு பள்ளிக்கு படையெடுக்கும் பெற்றோர்கள்

சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் என்ற  வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து எடுத்ததை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசி இருக்கின்றார் என தெரிவித்த அவர்,ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம் என தெரிவித்தார். தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து பேசியற்கு ஏன் உடனே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற கேள்விக்கு, பா.ஜ.க சட்டமன்ற தலைவர் நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தது. எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் வேண்டும் என தெரிவித்த அவர்,சட்டமன்றத்திற்கு நான் புதிது என்பதால் உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்ற  வில்லை இது தொடர்பாக உடனடியாக கட்சி தலைவர்களிடம் பேசிய பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Also Read: மாணவர்களுக்காக வீதியில் இறங்கி தண்டோரோ போடும் தலைமை ஆசிரியர்

மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு பொருளாதார  குழுவில் நியமித்து கொள்ளும் என்றால் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து தான் செயல்பட வேண்டும், இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது என்றும் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை வெளியிட்டகிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது எனவும், இதற்கு முன்பு பிரதமரை பற்றி தி.மு.க முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர்,பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: