கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர்
மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டம் நடைபெறும் அரங்கில் பிரதமர் நரேதிர மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என பா.ஜ.க கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வந்த பா.ஜ.க கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் கோபால்சாமி ஆகிய இருவரும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!
அப்போது அவர்களுடன் பா.ஜ.கவினரும் கலந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஊராட்சி அலுவலகத்தில் வைக்க வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.