• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஈஸ்ட் இந்தியா போல நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல் விமர்சனம்

ஈஸ்ட் இந்தியா போல நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்குகிறார்கள் - பாஜக குறித்து கமல் விமர்சனம்

கமல்

கமல்

பா.ஜ.க வின் கொங்குநாடு என்கின்ற கோஷத்தை அரசியல் கோஷமாக பார்க்கின்றேன். மக்கள் தேவையாக அதை பார்க்கவில்லை என கமல் தெரிவித்தார்.

  • Share this:
மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க  இரட்டை வேடம் போடுகின்றது எனவும் ,  போராடும் இருவருக்கும் வேறு பெயர்கள் இருந்தாலும் இரு கட்சிகளுமே மத்திய அரசின் பொம்மைகள்தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தெரிவித்தார்.

கோவையில் ம.நீ.ம கட்சி  தலைவர்  கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது வாக்களித்த கோவை தெற்கு மக்களுக்கு நன்றி எனவும்,நேர்மையாக வாக்களித்தார்கள், அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் செலுத்த வந்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க போக முடியாதது ஆளும்கட்சி நெருக்கடியல்ல என தெரிவித்த கமல், இது மக்களுக்கான நெருக்கடி எனவும் கொரோனா விவகாரத்தில் கட்சி பேதம் பார்த்து அரசு நெருக்கடி  கொடுக்க வில்லை மக்கள் நலன் பார்த்து கொடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
கொரொனா தொற்றால் எங்கள் கட்சி தொண்டர்களை  இழந்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

Also Read:  அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

இரண்டாம் கட்ட தலைவர்கள் வேறு கட்சிக்கு போனது தொடர்பு குறித்த கேள்விக்கு, "சௌரியமான செவிடு நான்” என தெரிவித்தார்.

கோவையில் பகிரங்கமாக காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லிய எங்களை வெற்றியின் மிக மிக அருகில் கொண்டு சென்ற கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன் என கமல் தெரிவித்தார்.

கொங்கு நாடு அரசியல் கோஷம்:

பா.ஜ.க வின் கொங்குநாடு என்கின்ற கோஷத்தை  அரசியல் கோஷமாக பார்க்கின்றேன். மக்கள் தேவையாக அதை பார்க்கவில்லை. அது ஒரு பெரிய கம்பெனி. ஈஸ்ட் இந்தியா கம்பெனி போன்று, நார்த் இந்தியா கம்பெனியை உருவாக்க முயல்கின்றனர்.

நீங்கள் ஒரு நாடு என்றால் தோளில் தூக்கி வைத்துக்கொள்வோம். வியாபாரத்திற்கு சவுரியமாக இருக்கும் என எங்கள் வளங்களை தனியாருக்கு தூக்கி கொடுக்க முயன்றால் அது (பா.ஜ.க)கம்பெனிதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என அவர் தெரிவித்தார். நலத்திட்டம் என்று எதுவும் பெரிதாக இல்லை என தெரிவித்த அவர், நியாயம் சொல்லும் மையங்ககளை கொஞ்சம்  கொஞ்சமாக மூடி வருகின்றனர், இது சினிமா தொழிலிலும் நடக்கின்றது என தெரிவித்த அவர் இதற்காகத்தான் டெல்லி சென்று வந்தேன் என தெரிவித்தார்.

Also Read:  யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சம்மந்தப்படாமல் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், கலைஞருக்கு நிறைய  மக்களுக்கு மனதில் இடமிருக்கின்றது என தெரிவித்த அவர்,  பென்னிகுயிக் நினைவகத்தை வைத்திருக்க வேண்டும், வைத்திருக்க வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

பாஜக இரட்டை வேடம் :

இந்தியாவிலேயே அதிகமாக இரட்டை வேடம் நடித்தவன் நான், இரட்டை வேடம் போடும் நடிகர்களை  நான் சட்டென்னு கண்டுபிடிப்பேன், மேகதாது விவகாரத்தில் பா.ஜ.க  இரட்டை வேடம்தான் போடுகின்றது, போராடும் இருவருக்கும் வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் இருவருமே மத்திய அரசின் பொம்மைகள்தான் என கமல் தெரிவித்தார்.

கொரொனா விவகாரத்தில் இந்த அரசு இயன்றதை செய்கின்றது, அது போதாது, இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என தெரிவித்த அவர் இன்னும் அதிகமாக செய்யமுடியும் என்பதை அரசுக்கு  நினைவுபடுத்துவோம் என தெரிவித்தார். முழுநேர அரசியல்வாதி என எவனும் இல்லை,  சாரி எவரும் இல்லை என தெரிவித்த அவர், எனது தொழில் நடிப்பு என தெரிவித்தார்.

Also Read:  SBI Yono Lite மொபைல் ஆப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

உள்ளாட்சி தேர்தல் எனது கடமை என தெரிவித்த அவர் மக்களாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நாங்கள் என தெரிவித்தார். தோல்வி வந்தால் விட்டுட்டு போயிடுவேன் என்றால் சினிமாவையும் விட்டுட்டு போயிருக்கனும், தோல்வி தந்த பாடம் அடுத்த வெற்றிக்காக அமையும் என்ற பாடம் கோவை மக்கள் கொடுத்து இருக்கின்றனர் எனவும், 1500 , 2000 என்ற வித்தியாசம் எல்லாம் ஒரு கணக்கே கிடையாது என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சியின் தொண்டன் நான் என தெரிவித்த அவர், மகேந்திரன் போன்றவர்கள் திமுக சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் தென்படவில்லை, லாபம் என்று எழுதி வைத்திருந்த போர்டை மட்டுமே பார்த்தேன் என ம.நீ.ம தலைவர் கமலஹாசன் தெரிந்ததார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: