கோவையில் பார்வைக்கு வைக்கப்பட்ட இனோவா கார்: செல்பி எடுத்து மகிழ்ந்த பா.ஜ.க தொண்டர்கள்

பா.ஜ.கவினர்

பா.ஜ.க தலைமையால் கோவை மாவட்டத் தலைவருக்கு வழங்கப்பட்ட இன்னோவா காரில் தொண்டர்கள் பயணம் செய்து இனிப்புகள் வழங்கி செல்பி எடுத்து பாஜகவினர் மகிழ்ந்தனர்.

  • Share this:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க 4 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து வெற்றி பெற்ற 4 தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களுக்கு பா.ஜ.க தலைமை இன்னோவா கார் பரிசாக வழங்கியது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமாருக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு பரிசாக வழங்கப்பட்ட இனோவா கார் கோவை மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு  பார்வைக்கு வைப்பதாகவும் அதைப் பார்வையிட தொண்டர்கள், நிர்வாகிகள் வர மாவட்ட பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது.

பா.ஜ.கவினர்


இந்நிலையில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி புதிய இன்னோவா காரை மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும்  நிர்வாகிகள் சாலையில் இயக்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் காரின் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். ஏராளமான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 க்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் மட்டுமே பா.ஜ.க மாவட்ட அலுவலகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடதக்கது.
Published by:Karthick S
First published: