• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் - அண்ணாமலை

பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் - அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

பாஜக மீது திமுக  கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் , தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம் பேசியுள்ளார்.

  • Share this:
தமிழக அமைச்சர் சேகர் பாபு பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன் எனவும், அவர் தொட்டு பார்க்கட்டும் எனவும் பா.ஜ.க மீது கை வைத்தால் வட்டியும்  முதலுமாக திருப்பிக் கொடுப்போம்  என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்காளதேசத்தில் நவராத்திரி பண்டிகையின் போது இஸ்கான முழு நேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டிக்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள  இஸ்கான் கோவில்களில் அமைதி போராட்டம் நடத்தப்படுகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை இஸ்கான் கோவிலில் நடைபெற்ற அமைதி போராட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் அவர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘ வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றது. இவற்றை தடுக்க அந்நாட்டு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாடு சிறுபான்மையினருக்கு வழங்கும் சட்ட ரீதியான உரிமைகளை கூட மற்ற நாடுகள் கொடுப்பதில்லை என தெரிகின்றது.

Also Read: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பெரியார் வாசகத்துடன் முற்றுப்புள்ளி: அமைச்சர் செந்தில் பாலாஜி!

கட்டுமணி  கமிஷன் மணி

தமிழக அமைச்சர்கள் குறித்து பேசிய அண்ணாமலை, கட்டுமணி  கமிஷன் மணி என  ஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகிறது எனவும், ஆனால்  இன்னமும் தமிழக முதலவர் மௌனம் காண்பிப்பது ஏன் எனவும் கேளவி எழுப்பினார்.
ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய சமையலர்களை ஷிப்ட்  போட்டு வேலை வாங்கப்படுகிறது. ஆட்சி அமைத்து 5 மாதங்களுக்குள் இவ்வளவு பிரச்னைகள் ஆரம்பிக்கிறது. இதற்கு பதிலே இல்லை .

மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என கூறியுள்ளார். தமிழக அமைச்சர் நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. நிலக்கரி ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமலும், மின்சாரத்தை விலை கொடுத்து  வாங்கவில்லை எனக்கூறிவிட்டு, தற்போது வாங்கியதாக கதை சொல்கிறார்கள்.

அமைச்சர் கமிஷன் வாங்க மின்சார வாரியம்

தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக அல்ல, தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகதான் எனவும் தெரிவித்தார். இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது எனவும், இதேபோல் தான் தடுப்பூசி தட்டுப்பாடும்  கிடையாது எனவும் தெரிவித்த அவர், தமிழக அரசு தற்போது 60 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி கையிருப்பில் வைத்திருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Also Read:  அரசுப்பேருந்தில் ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

மின்வாரியத்தில் 4 சதவித கமிஷன் விவகாரத்தில் நான் தகவல்களை  திருடி விட்டதாக சொல்கின்றனர். திருட்டை கண்டுபிடிப்பதற்காக தான் அந்த ஆவணம் பரிமாறப்பட்டதே தவிர, அதை திருடி போடவில்லை. லஞ்சம் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. லஞ்சம்  இல்லாமல் பெரிய கான்டிராக்ட் நடக்கிறது. ஒரு அடிக்கு ஒரு தொகை  என லஞ்ச்ம வாங்கப்படுகின்றது . இதே அமைச்சர்  3 மாதங்கள் கழித்து பதவியில் இருந்தார் என்றால், மதுவிலக்கு ஆயத்தீர்வை பற்றி பேசுவோம்.

ஒரு குடும்பத்தின் வளம் காக்க, ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையான அதிகாரியை ஊழல்வாதிகளாக மாற்றுகின்றனர். நேர்மையாக நிறுவனம் நடத்த முயன்றால் அழைகழிக்கப்படுகின்றனர். இப்படி செய்தால் சாதாரண மனிதர் ஊழல் வாதிகளாக மாறாமல் என்ன ஆகும். இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும், பில் கிளியர் செய்வதற்கு 4 சதவீதம்,  காண்ட்ராக்டுக்கு 15  சதவீதம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பிரதமர் மோடி, ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என சொல்லியுள்ளார் .அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

பாஜகவை தொட்டு பார்க்கட்டும்

அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன். தொட்டு பார்க்கட்டும் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம், மோடி டெல்லியில் உள்ளார், தொடுவார்கள் என காத்திருக்கிறோம்.  தொட்டு பார்க்கட்டும், வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம் என்றார். ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செயகிறார். பாஜக 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது.செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் ஒரு தொகுதியோட ராஜாவாக  சுற்றி வருகின்றனர். ஊழல் செய்தால் தட்டி கேட்போம் என தெரிவித்தார்.

பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், திமுக ஐ.டி பிரிவு தலைவர் தட்டிக்கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களை பேருக்கு கட்சியை விட்டு நீக்கப்படுகின்றார். அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாசமாக பேசுபவர்கள் மீது இந்த  அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறை நேர்மையாக இருந்தால் சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக மீது திமுக  கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் , தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் நலனுக்காக இருக்க வேண்டும், ஊழலை எதிர்க்க வேண்டும், அமைச்சரும் புரிந்துக்கொண்டு, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம். ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல்  விடுக்கக்கூடாது” எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: