• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மிலாடி நபி : கோவையில் பள்ளிவாசல் சார்பில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை

மிலாடி நபி : கோவையில் பள்ளிவாசல் சார்பில் குறைந்த விலையில் பிரியாணி விற்பனை

மிலாடி நபி பிரியாணி

மிலாடி நபி பிரியாணி

50 பிரம்மாண்ட அண்டாக்களில் 2500 கிலோ அரிசியைக் கொண்டு மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டது.

  • Share this:
கோவை கோட்டைமேடு பகுதியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல் சார்பில் குறைந்த விலையில் ஆட்டுக்கறி பிரியாணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 50 பெரிய அண்டாக்களில் விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு காலை முதல் பிரியாணி விற்பனை நடைபெற்று வருகின்றது.

இறைதூதரான முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும்  மிலாடி நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக மிலாடி நபி விழாவன்று இஸ்லாமியர்களில் அனைத்து தரப்பினரும் சுவையான உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக  பள்ளிவாசல் நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில்  பிரியாணி விநியோகம் செய்வதற்கா பிரியாணி தயாரிக்கும் பணிகள் நேற்று இரவு முதலே நடைபெற்றது. பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில்  50 பிரம்மாண்ட அண்டாக்களில் 2500 கிலோ அரிசியைக் கொண்டு மட்டன் பிரியாணியானது தயாரிக்கப்பட்டது.

விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு இன்று காலை முதல் குறைந்த விலையில்  பிரியாணி விற்பனையானது துவங்கி  நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் தீர்க்கதரிசியான முகமது நபி  பிறந்தநாளை முன்னிட்டு, லாப நோக்கமின்றி  பிரியாணி தயாரிக்கப்பட்டு 15 ஆயிரம்  சாப்பிடும் வலையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக  பள்ளி வாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முஸ்லீம், இந்து, கிறிஸ்தவ மக்கள் என அனைத்து தரப்பினரும் குறைத்த விலையில்  பிரியாணி வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யபட்டு இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இரு வருடங்களாக மிலாடி நபி விழா கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கப்படுவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கடைகளில் மட்டன் பிரியாணி ஒரு கிலோ 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இன்று பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில் 850 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்தனர். இந்த ஆண்டு அரசு கொரொனா காரணமாக  மதரஸா மாணவர்கள் மிலாடிநபி  ஊர்வலம்  செல்வது ரத்து செய்துள்ளதாக கூறினர்.

அனைத்து சமூக மக்களும் பயனடையும் வகையில் சமையல் வல்லுனர்களைக் கொண்டு பள்ளிவாசல்களில் பிரயாணி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், 50 அண்டாக்களில் 2500 கிலோ அரிசியை கொண்டு  இரவு முழுவதும் பிரியாணி தயாரித்து காலை 6 மணி முதல்  குறைந்த விலையில் பிரியாணி விற்பனை நடைபெறுவதாகவும்  நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Must Read : அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான, அரசின் அதிரடி அறிவிப்பு

காலை 6 மணி முதல் பிரியாணி விற்பனை துவங்கிய நிலையில் ஏராளமான பொதுமக்கள் ஆட்டுக்கறி  பிரியாணியை வாங்கிச் சென்றனர். வெளியில் வாங்குவதை விட குறைவான விலை என்பதால் இங்கு வந்து வாங்கி செல்வதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: