• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவையில் பைக் திருடனை 1 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்! - சிசிடிவி காட்சிகள்

கோவையில் பைக் திருடனை 1 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்! - சிசிடிவி காட்சிகள்

கோவையில் பைக் திருடனை 1 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்! - சிசிடிவி காட்சிகள்

கோவையில் பைக் திருடனை 1 கி.மீ தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்! - சிசிடிவி காட்சிகள்

கோவையில் இருசக்கர வாகன திருடனை போலீசார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

  • Share this:
    கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த திருடர்களில் ஒருவரை போலீசார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே நீலம்பூர் பைபாஸ் சாலையில், காவல் ஆய்வாளர் மாதையனும், மற்றொரு காவலரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதை புரிந்து கொண்ட இளைஞர்கள் இருவரும் திடீரென இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை தங்களது ரோந்து வாகனத்திலேயே ஆய்வாளர் மாதையனும், மற்றொரு காவலரும் விரட்டிச் சென்ற நிலையில், முதலிபாளையம் பிரிவு அருகே இளைஞர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு, ஆளுக்கொரு திசையில் ஓடியுள்ளனர்.

    அப்போதும் அசராத போலீசார், ரோந்து வாகனத்திலேயே விரட்டினால், குறுகலான பகுதிக்குச் சென்று தப்பிவிடுவார்கள் என நினைத்து, தங்களது வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு, ஒருவரை மட்டும் குறிவைத்து விரட்டிச் சென்றனர். இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் திருடனை காவல் ஆய்வாளர் மாதையன் துரத்திச் சென்றார். அந்த காட்சியும் அடுத்தடுத்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. இறுதியில் காட்டுப் பகுதியில் பதுங்கிய இளைஞனை கட்டிப்புரண்டு போராடி கைது செய்தார்.

    பின்னர், மற்ற காவலர்களின் உதவியுடன் அவனை காவல்நிலையம் கொண்டுவந்து விசாரித்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ண்ட ஹரிஹரசுதன் என்பது தெரியவந்தது. தப்பியோடிய நபர் சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பதும், இருவரும் கோவை லட்சுமி மில் பகுதியில் தங்கியிருந்து தொடர்ச்சியாக இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, ஹரிஹரசுதன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடிய மற்றொரு திருடன் சங்கரை தேடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: