ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நிர்வாக வசதிக்காக கொங்குநாடு அமைவதில் தவறில்லை: கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி பேச்சு!

நிர்வாக வசதிக்காக கொங்குநாடு அமைவதில் தவறில்லை: கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி பேச்சு!

தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம் என தெரிவித்த பெஸ்ட் ராமசாமி, வட தமிழகத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொங்குநாட்டை நிர்வாக வசதிக்காக தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும், கொங்குநாடு விவகாரத்தில்  அதிமுக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

கோவையில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின்  மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி இன்று பத்திரிகையாளர் மன்றத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  தமிழ்நாடு மாநிலம் 12 மாவட்டமாக இருந்தநிலையில்  தற்போது 38 மாவட்டமாக பிரிந்து 34 அமைச்சர்கள் வரை இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

வரிவருவாய் அதிகம் கொடுத்தாலும் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை . தமிழகத்தில் வரி வருவாய் 66 சதவீதம் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான்  அரசுக்கு செல்கின்றது. வருவாயை பெற்றுக்கொண்டு இந்த  பகுதிகளுக்கு எதுவும்  செய்ய வில்லை’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க: பேசு பொருளாகும் கொங்கு நாடு விவகாரம்.. கட்சித் தலைவர்களின் அபிப்ராயம் என்ன?

நிர்வாக வசதிக்காக கொங்குநாடு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் இன்னும் வளர்ச்சி ஏற்படும் என  தெரிவித்த அவர், 1976 ல் இருத்து இந்த கோரிக்கை முன்வைத்து வருவதாகவும் , கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் தங்களின்  எண்ணம் என்றும்தெரிவித்தார்.கொங்குநாடு என்பது குறிப்பிட்ட சமுதாயத்துக்கு  மட்டுமானதல்ல, கொங்கு நாட்டில் வாழும் அனைவருக்குமானது என தெரிவித்த அவர் இது பிரிவினையாகாது எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி கண்டிக்கத்தக்கது - கே.எஸ். அழகிரி...

தனிநாடு கேட்கவில்லை தனி மாநிலம்தான் கேட்கின்றோம் என தெரிவித்த அவர், வட தமிழகத்தை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும், வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தவறு என தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

கொங்குநாடு விவகாரத்திற்கு அதிமுக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவித்த அவர், அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்குநாடு கோரிக்கையினை வலுப்படுத்துவோம் என்றும்  கொங்கு நாடு கோரிக்கை தொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்க இருக்கின்றோம் எனவும்  தெரிவித்தார்.

Published by:Murugesh M
First published:

Tags: Kongu Nadu, Kongunadu Munnetra Kazhagam