• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டான்ஜெட்கோவில் 1.59 லட்சம் கோடி கடனுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம் - அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

டான்ஜெட்கோவில் 1.59 லட்சம் கோடி கடனுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம் - அண்ணாமலை அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதற்கு தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதற்கு தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது, தூத்துக்குடியில் 4 சதவீத கமிஷன் கான்டிராக்டர்களிடம் வாங்கிக்கொண்டு பில் கிளியர் செய்யப்படுகின்றது. இதை வெளிகொண்டு வந்தவுடன் தூத்துக்குடியில் மார்ச் மாதம் முதல் செம்டம்பர் மாதம் வரை நிலுவையில் உள்ள பில்கள் கேட்கப்பட்டுள்ளது. "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை" என்று சொல்வதை போல எதற்காக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இந்த தகவலை கேட்டு இ-மெயில் அனுப்ப வேண்டும்?

ஒரு சில கான்டிராக்டர்களுக்கு மட்டும் பில்கள் கிளியர் செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு செய்வதில்லை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கின்றது, இதற்கு ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம்.

தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதில் துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதே இதற்கு காரணம், அமைச்சர் செந்தில் பாலாஜி இவற்றை மறுகட்டமைப்பு செய்கிறார்.

மின்வாரியத்தில் பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு அடுத்து கான்டிராக்ட் கொடுக்க இருக்கின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறிது நாளில் கான்டிராக்ட் அந்த நிறுவனத்தற்கு வழங்கப்பட இருக்கிறது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து ஊழல், வேலை வாங்கி தருவதாக ஊழல், மணல் ஊழல், இப்பொது மின்வாரிய ஊழல் என இருக்கிறார். நிச்சயமாக செந்தில் பாலாஜியை பதில் சொல்ல வைப்போம்.

திமுக எம்.பி. வில்சன் பி.ஜி.ஆர் எனர்ஜிக்கு நீதிமன்றத்தில்  எதற்கு ஆஜராகின்றார் என கேள்வி எழுப்பிய அவர், ஒரு புறம் மின்வாரியம் ஆஜராகின்றது, மறுபுறம் திமுக எம்.பி வில்சன் வழக்கறிஞராக ஆஜராகின்றார்.

பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்தை யார் வாங்க போகின்றார்? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, அதற்காகத்தான் கோபாலபுரம் என சமூகவலைதளங்களில் குறிப்பிட்டதாகவும்  தெரிவித்தார். பாஜக இதை சும்மா விடமாட்டோம், செந்தில் பாலாஜி வாயில் இருந்து பதில் வர வைப்போம்.

தூத்துக்குடி சிபிசிஐடி எஸ்.பி மின்வாரிய கான்டிராக்டர்களிடம்  நேரில் விசாரணை நடத்தி இருக்கின்றார். முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கிறார். தினமும் ஒவ்வொரு விவகாரமாக வெளியிடுவோம் என்றார்.

மேலும் தமிழக ஆதி்திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வீட்டில், திருப்பூர் மாவட்ட ஆதி் திராவிடர் ஹாஸ்டல் சமையலரை மூன்று வேலை சமைக்க வைக்கின்றனர். இது தொடர்பான நமக்கு தகவல்  சொன்ன பெண்ணின் ஆடியோ இருப்பதாகவும், அதை ரீலீஸ் செய்ய விரும்பவில்லை என தெரிவித்த அவர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் வீட்டில் சமையலரை சமைக்க வைப்பதுதான் சமூக நீதியா?  முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நேரில் தலையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: