கோவையில் பாஸ்போர்ட் இல்லாமல் நுழைந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெண்ணை மீட்ட சரவணம்பட்டி காவல் துறையினர் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அந்த பெண்ணின் குடியுரிமை ஆவணங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அஜித்மோன் , மஹான்ஷா என்ற இருவரும் இரு பெண்களும் இருந்தனர். இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் அஜித்மோனின் மனைவி என்பதும் மற்றொரு பெண் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருடைய பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் பங்களாதேஷில் இருந்து கோவைக்குள் ஊடுருவி விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக இது குறித்து குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சரவணம்பட்டி போலீசார்,மீட்கப்பட்ட பெண்களில் பங்களாதேஷ் நாட்டை பெண்ணை மட்டும் சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர். பங்களாதேஷ் நாட்டு பெண்ணின் குடியுரிமையை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் பாஸ்போட் இல்லாமல் கொல்கத்தா, பெங்களுர் பகுதிகளில் தங்கியிருத்த அவர் தற்போது கோவை காந்திபுரத்தில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்து வைத்து இருந்த கேரளமாநிலத்தை சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரிடம் கோவை சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.