Home /News /tamil-nadu /

'தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது' - பேரூர் ஆதினம் வலியுறுத்தல்

'தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது' - பேரூர் ஆதினம் வலியுறுத்தல்

பேரூர் ஆதினம்

பேரூர் ஆதினம்

Dharmapuram Adheenam pattina pravesam | தர்மபுர ஆதினம் பல்லக்கில் சென்று அருளாசி வழங்கும் நிகழ்வில் , கொத்தடிமை முறையோ, ஆண்டான் அடிமை முறையோ , மக்களை துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லாமல் குருவே சிவம் என சீடர்கள் சுற்றி வருகின்ற மரபு, இதற்கு தடை விதித்திருப்பது பெரும் வருத்தத்திற்குறியது என பேரூர் ஆதினம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தருமபுர ஆதினம் பல்லக்கில் சென்று அருளாசி வழங்க அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும் இது போன்று இருக்க கூடிய தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

    புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குரு மகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள 'பட்டினப்பிரவேசம்' பல்லக்கு நிகழ்ச்சியை அரசு தடை செய்ததை கண்டித்தும், தடையை வாபஸ் பெறக்கோரியும் தருமபுரம் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தற்போது இது குறித்து பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், நமது சமயம் மிக தொன்மை வாய்ந்தது, பல்வேறு வகையான சம்பிரதாயங்களை கொண்டது. குறிப்பாக சைவ சமயத்தில் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. திருக்கோவில்களில் நடைபெறுவது போல ஆதினங்களிலும், மடங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ALSO READ |  பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் - நீதிபதிகள்

    அதையொட்டி ஆதினத்தின் தலைவர் மக்கள் அருளாசி செலுத்த பல்லக்கில் செல்வது ஒரு மரபு, இது நீண்ட காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு நெறிமுறையாகும். அந்த அடிப்படையில் தருமபுர ஆதினமும் பல்லக்கில் சென்று மக்களுக்கு ஆசி வழங்கும் அடிப்படையில்  நிகழ்ச்சியை அமைத்துள்ளனர். அதில் கொத்தடிமை முறையோ ஆண்டாள் அடிமை முறையோ மக்களை துன்புறுத்தும் முறையோ ஏதும் இல்லாமல் குருவே சிவம் என சீடர்கள் சுற்றி வருகின்ற மரபு. இதற்கு தடை விதித்திருப்பது பெரும் வருத்தத்திற்குறியது.

    ஆகவே இந்த தடையை தமிழக முதல்வர் தலையிட்டு நீக்க வேண்டும். இது போன்று இருக்க கூடிய தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. நமது நாடு மதச்சார்பற்ற நாடு, இந்து சமயத்திற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றோம். அதை தவிர்க்க வேண்டும். இந்த மாதிரியான நெறிமுறைகள் ஏதாவது இருந்தால் ஆதினங்கள், மடாதிபதிகளை அழைத்து கலந்தாலோசனை செய்து அதற்கு பின் அவர்களது முடிவை அமல்படுத்த அறிவிக்க வேண்டும், அடியார்கள், போன்றோரின் கருத்து அடிப்படையில் தடை செய்ய கூடாது. தற்போது அறிவித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சுரேஷ் ( கோவை)
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Coimbatore, Hindu

    அடுத்த செய்தி