Home /News /tamil-nadu /

வீசி எறியும் பாட்டில்களால் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.. மதுக்கரை வனத்தில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

வீசி எறியும் பாட்டில்களால் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.. மதுக்கரை வனத்தில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

காட்டு யானைகள் குறித்து விழிப்புணர்வு

காட்டு யானைகள் குறித்து விழிப்புணர்வு

Coimbatore : கோவையில் காட்டு யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வனத்துறையினர் கல்லூரி மாணவிகளை மதுக்கரை அடர் வனப்பகுதிக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவையில் காட்டு யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  கல்லூரி மாணவிகளை மதுக்கரை அடர் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனப்பகுதியில் ரயிலில் செல்லும் போது பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை வீசுவதால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மாணவர்களுக்கு வனத்துறையினர் விளக்கம் அளித்து விழுப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி. இந்த வனப்பகுதியின் வழியாக உள்ள இரண்டு ரயில் பாதைகளில் காட்டுயானை உட்பட விலங்குகள் அடிக்கடி ரயில் மோதி உயிரிழந்து வருவதால் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு 40 கிலோ மீட்டர் வேகத்தில்  இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர ரயில்களில் செல்லும் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்லும் போது வீசி எறிந்து செல்லும் மதுபாட்டில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவையும்  காட்டுயானை உட்பட வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனையடுத்து காட்டு யானைகள் மற்றும் வனவிலங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவை மாவட்ட வனத்துறை தன்னார்வலர்களுடன் இணைந்து, கல்லூரி மாணவர்களை வனப்பகுதிக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகளை மதுக்கரை வனத்திற்குள் அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் காட்டு யானைகளை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது எனவும், அடர்ந்த வனம் உருவாவதில் யானைகளின் பங்கு மிகப்பெரியது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தததாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் யானை மற்றும் வேறு  விலங்குகளுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதையும்  தெரிந்து கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர். மேலும், கல்லூரியில் உட்கார்ந்து  இது குறித்து தெரிந்து கொள்வதை விட, நேரடியாக வனத்திற்குள் வந்து தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

மதுக்கரை வனப்பகுதியில் யானைகள் நிறைந்த பகுதி என்பதுடன், அடிக்கடி ரயில்களில் யானைகள் உட்பட வனவிலங்குகள்  அடிபட்டு இறந்து வரும் நிலையில் , மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த மதுக்கரை வனப்பகுதியை முதலில் தேர்வு செய்ததாகவும், இதே போல்  ஒவ்வொரு வாரமும் ஓவ்வொரு வனப்பகுதிக்கு மாணவர்களை  அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் குறித்து விழிப்புணர்வு


காட்டு யானைகள் குறித்தும் வனம் குறித்தும் மாணவர்களுக்கு  சொல்லி கொடுத்தால், அது அவர்கள் வீட்டிற்கே சொல்லி கொடுப்பதை போல எனவும் , 50 மாணவர்களுக்கு  சொல்லி கொடுப்பது 500  பேருக்கு சொல்லி கொடுப்பதை போன்றது என்பதால் மாணவர்களை வனப பகுதிக்குள் அழைத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக மதுக்கரை வனச்சரகர் தெரிவித்தார்.

Must Read : தஞ்சாவூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?

மேலும், மதுக்கரையில் அடர் வனப்பகுதியில் இரு ரயில் வழித்தடங்கள் இருப்பதால்  ஆர்டிபிசியல்  இன்டலிஜென்ஸ்  முறையில் யானைகளை கண்காணிக்க ரயில்வே துறையுடன் இணைந்து  கண்காணிப்புகளை தமிழக வனத்துறை மேற்கொண்டு வருவதாகவும் மதுக்கரை  வனச்சரகர் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் அடர் வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தில்  இருந்த பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, College student, Elephant

அடுத்த செய்தி