Home /News /tamil-nadu /

கோவையில் திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்: ஆணையர் உத்தரவு

கோவையில் திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்: ஆணையர் உத்தரவு

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    கோவையில் திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகள் குறித்து மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அந்தவகையில், மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல், வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also read: மதுரையில் 'மோடி பொங்கல்' விழா ரத்து - அண்ணாமலை அறிவிப்பு

    இந்நிலையில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெறும்‌ திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை மாநகராட்சி இணையதளத்தில் தெரியப்படுத்திட வேண்டும் என கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஒமைக்கரான்‌ வைரஸ்‌ நோயை கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌ தமிழ்நாடு அரசு மாநிலம்‌ முழுவதும்‌ 06.01.2022 முதல்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரையிலும்‌ இரவு நேர ஊரடங்கும்‌, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ முழு ஊரடங்கும்‌ நடைமுறைப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகள்‌ விதித்து உத்தரவிட்டுள்ளது.

    அரசின்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்திடும்‌ வகையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள உணவகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

    Also Read : அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன - துரைமுருகன் கேள்வி.. காரசார விவாதம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Coimbatore, Corona, Covid-19, Lockdown, Omicron

    அடுத்த செய்தி