கோவை மாவட்டம் அன்னூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கடந்த 6ம் தேதி வந்த விவசாயி கோபால்சாமி சொத்து ஆவணங்களில் பெயர் விடுபட்டு இருப்பது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி விவசாயியை தாக்கினார். பின்னர் விவசாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த சம்பத்தை அங்கிருந்த சிற்றிதழ் நடத்தி வரும் உள்ளூர் நபர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
Also read: மினி லாரி மீது பைக் மோதி விபத்து: கணவன், மனைவி மற்றும் உறவினரின் பெண்குழந்தை உயிரிழப்பு
பின்னர் விவசாயி காலில் விழும் பகுதியை மட்டும் 7ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனைதொடர்ந்து 14ம் தேதி விவசாயி கோபால்சாமியை கிராம உதவியாளர் முத்துச்சாமி தாக்கும் காட்சிகளை வெளியிட்டார்.
உண்மை சம்பவத்தை மறைத்து வீடியோவை தனித்தனியாக வெளியிட்ட நிலையில், சமூக ரீதியான பதட்டம் ஏற்படும் சூழல் உருவானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் நேற்று இரு சமூகங்களிடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்ட அடையாளம் தெரிந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அன்னூர் வருவாய் ஆய்வாளர் பெனாசீர் பேகம் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்து நபர் மீது ஜாதி, இனம், மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டி விடுதல் (153(a)(1)(b)) தூண்டிவிடுதல் என்ற பிரிவின் கீழ் அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் எடிட் செய்து பரப்பிய அடையாளம் தெரிந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அன்னூர் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.