• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோயம்புத்தூரில் வயதானவர்களுக்கு உதவுவதுபோல நடித்து ஏ.டி.எம்மில் கொள்ளை- திரைப்பட உதவி இயக்குநர் கைது

கோயம்புத்தூரில் வயதானவர்களுக்கு உதவுவதுபோல நடித்து ஏ.டி.எம்மில் கொள்ளை- திரைப்பட உதவி இயக்குநர் கைது

கோயம்புத்தூர் திருட்டு

கோயம்புத்தூர் திருட்டு

கோவையில் ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் வயதானவர்களை குறி வைத்து நூதன முறையில் பணத்தை திருடி வந்த சினிமா உதவி ஒளிப்பதிவாளரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

  • Share this:
கோவை புலியகுளம், தாமுநகர் பகுதியில் ஜெயராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி, அவரிடம் 1,000 ரூபாய் மற்றும் ஏ.டி.எம் கார்டை பறித்ததாக முகமது தம்பி என்ற மகி(வயது33) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் விசாரணை நடத்தியபோது அவரிடம் ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் இருப்பது தெரியவந்தது. ஏ.டி.எம் மையங்களுக்கு வரும் வயதான நபர்களுக்கு உதவுவது போல் நடித்து அவர்களின் பணத்தை அந்த இளைஞர்  திருடி இருப்பதும் தெரியவந்தது.

இவரிடம் இருந்து 10 ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்த போலீசார் கைதான முகமது தம்பியிடம் விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையங்களுக்கு வரும் வயதானவர்களிடம், அவர்களுக்கு உதவுவது போல நடித்து, அவர்களின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக  போலி ஏடிஎம் கார்டுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ஏ.டி.எம் மையத்தில் இருந்து பணத்தை எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திரைப்பட உதவி ஒளிப்பதிவாளரான இவர் தம்பி, சித்திரை, செவ்வானம், லாபம் ஆகிய படங்களில்  உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பல  குறும்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்ததாகவும் போலீசில் முகமது தம்பி தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைதான முகமது தம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: