முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவை மாநகராட்சியில் வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார்!

கோவை மாநகராட்சியில் வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார்!

வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார்

வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு  20 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் ,5 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல் வேட்புமனு பெறப்படும் நிலையில் 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர், வேட்பமனுக்கள் பெறும் இடங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  கோவை மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள்  அமைப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் பறக்கும்  படைகள் கண்காணிப்பை துவங்கியுள்ளன.

Also read... ஆக்கிரமிபுகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களை எந்த பதிவும் செய்ய கூடாது - உயர் நீதிமன்றம்!

வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன்,உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு  மேல் பணம்  எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் எனவும்  அறிவுறுத்தபட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local Body Election 2022