கோவை சிங்காநல்லூரில் தடுப்பூசி போடும் இடத்தில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்!

கோவை சிங்காநல்லூர்

அப்போது சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராமுக்கு ஆதரவாக கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனும் வந்த நிலையில், அங்கு பரபரப்பு நிலவியது. 

  • Share this:
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்களில் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம் சார்பில் கபசுர குடிநீர், முகக்கவசம் போன்றவற்றை வழங்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரையும் காவல் துறையினர் சமரசபடுத்தினர்.

கோவையில் கொரொனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சார்பில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்களுக்கு சென்று பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், பிஸ்கட், குடிநீர் போன்றவைகளை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இன்று சிங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு சென்ற எம்.எல்.ஏ., கே.ஆர்.ஜெயராம் மற்றும் அதிமுகவினர் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் பிஸ்கட் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த திமுகவினர், எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊசிபோடும் இடத்தில் வந்து கபசுர குடிநீர், பிஸ்கெட், மாஸ்க் போன்றவற்றை கொடுக்க கூடாது என திமுகவினர் எம்.எல்.ஏவுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் , போலீசார் இரு தரப்பையும் சமரசபடுத்தினர்.

அப்போது சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராமுக்கு ஆதரவாக கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனும் வந்த நிலையில், அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு அதிமுக எம்.எல்ஏக்கள் ஜெயராம், அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கபசுரகுடிநீர், பிஸ்கட், மாஸ்க் போன்ற நிவாரண உதவிகளை வழங்கினர். இரு கட்சியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: