முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பாஜகவில் இருந்து விலகி சென்றுள்ளனர் - அண்ணாமலை

சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பாஜகவில் இருந்து விலகி சென்றுள்ளனர் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : பாஜக-அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எனவு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார்.

  • Last Updated :

வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோர் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல எனவும், தமிழக அரசின் ஊர்தி குடியரசு தின விழாவில் அனுமதிக்காதது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் உரிய விளக்கத்தை அளிக்கும் எனவும், உத்திரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பாஜகவில் இருந்து பலர் விலகி சென்றுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

கோவை செவபுரம் தொகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா" எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இங்கு 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். மேலும் உரியடித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோர் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல என தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு துறை அமைச்சகம் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக ஒரு குழு அமைத்து, எந்தெந்த பொருட்கள் ஊர்தியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும்.

அவ்வாறு வழங்கப்பட்ட ஆலோசனைகள் அடிப்படையில் 5 முதல் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நடக்கும் எனவும், தமிழக அரசு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஊர்திக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை கேட்டு, உரிய முறையில் பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

கேரள மாநில ஊர்த்தியில் ஆதி சங்கரர் படம் இடம்பெறக்கூடாது என அம்மாநில அரசு தெரிவித்ததால், நாராயண குருவின் படமும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேரம் கருதி அனைத்து மாநில அரசுகளின் ஊர்திகளும் பங்கேற்க முடியாது எனக்கூறிய அண்ணாமலை, தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி கருத்து சுதந்திரம் அல்ல எனவும் தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும், வஞ்சகமான முறையில் இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சட்ட ரீதியாக அணுகுவதாகவும் கூறினார்.

உத்திரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் பாஜக உபி தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனவும் தெரிவித்தார். பஞ்சாபில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதின் மூலம், பிரதமரின் பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது எனவும், உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் 30 சாலைகளில் வாகன நிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல எனவும், இதனை கண்டித்து வருகிற 21ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், அதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் தேர்தலில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

Also Read : உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் - கருத்துக் கணிப்பில் தகவல்

பொங்கல் பரிசிலிருந்த வெல்லம் உருகும் என்பதை விசாரிக்க டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கம் அளிக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். உதயநிதியை கிரவுன் பிரின்ஸ் என விமர்சித்த அவர், நகைக்கடன் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மூலம் தமிழக அரசு 500 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்கு சான்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More : தேசத்தின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது எனவு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது எனவும் கூறிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகியுள்ளதாகவும் பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார். கார்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னை அவதூறாக பேசுவதோடு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனவும் பேசுகிறார் ஆனால், இதுவரை திமுக இது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். மேகதாதுவில் அணை கூடாது என்பதில் தமிழ்க பாஜக உறுதியாக உள்ளது எனவும் தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லை பெரியாறு அணைகளின் உரிமைகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார்.

Must Read :  தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?

முன்னதாக நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, அண்ணாமலை வருவதற்கு தாமதமானதால், பொங்கல் வைத்த மகளிர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலை உரி அடித்து தொண்டர்களை மகிழ்வித்தார். இருப்பினும் சமூக இடைவெளியின்றி கட்சியினர் அங்கு கூடியிருந்ததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவியது.

top videos

    செய்தியாளர் :  சுரேஷ், தொண்டாமுத்தூர், கோவை 

    First published:

    Tags: Annamalai, BJP