Home /News /tamil-nadu /

ஜெயலலிதா வேடமிட்ட குழந்தையுடன் வந்து மனுத்தாக்கல் செய்த அ.ம.மு.க வேட்பாளர்- கோவையில் சுவாரஸ்யம்

ஜெயலலிதா வேடமிட்ட குழந்தையுடன் வந்து மனுத்தாக்கல் செய்த அ.ம.மு.க வேட்பாளர்- கோவையில் சுவாரஸ்யம்

அமமுக வேட்பாளர்

அமமுக வேட்பாளர்

கோயம்புத்தூரில் ஜெயலலிதா போன்ற வேடமிட்டு குழந்தையுடன் வந்து அ.ம.மு.க வேட்பாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

கோவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வேடமணிந்து பொம்மை துப்பாக்கிகளுடன் சிறுவர்கள் படை சூழ அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சுயேட்சை வேட்பாளர்கள் நூதன முறைகளில் மனு தாக்கல் செய்தனர். இதன் ஒரு பகுதியாக மன்னர் வேடமணிந்து வருவது, பாரத மாதா வேடமணிந்து வருவது, தேசியத் தலைவர்கள் வேடமணிந்தவர்களுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்வது என அனைவரின் கவனத்தை ஈர்த்தனர்.

இதைத்தொடர்ந்து கோவை 90வது வார்டில் அமமுக சார்பில் நாபிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்தார்.

அப்போது அவருடன் அவரது மகள் நாஃபில்லா என்பவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் கண்ணாடி, பச்சை நிற சேலையுடுத்தி வந்தார். அவரை சுற்றிலும், கருப்பு உடை அணிந்த சிறுவர்கள் பொம்மை துப்பாக்கிகளுடன், கண்களில் குளிர்கண்ணாடி அணிந்தபடி வந்தனர்.

சிறுவர்களும் தத்ரூபமாக தங்களது கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடந்து வந்தது, அங்கிருந்தவர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான அன்பை பறைசாற்றும் வகையில் மகளுக்கு வேடமணிந்து அழைத்து வந்ததாக வேட்பாளர் நாபிக் தெரிவித்தார்.

செய்தியாளர்: ஆரோக்கிய ஜெரால்டு, கோயம்புத்தூர்.
Published by:Karthick S
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி