ஒரே நாளில் அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின; விவசாயிகள் மகிழ்ச்சி..

அமராவதி அணை

அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரே நாளில் அமராவதி, சோலையாறு என இரண்டு அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  90 அடியை எட்டிய அமராவதி அணை:

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோவை மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

  அமராவதி  அணை


  இதன் ஒரு பகுதியாக கூட்டாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமராவதி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணை கிடுகிடுவென நிறையத் தொடங்கியது.

  90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை இன்று காலையில் 86 அடியை எட்டிய நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதனுடைய முழு கொள்ளளவான 90 அடியையும் எட்டியது.

  அமராவதி  அணை


  அணையின் பாதுகாப்பு நலன் கருதி தற்பொழுது மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

  இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறையினரும் பொது மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

  Also Read:   மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

  சோலையாறு அணை:

  இதே போல கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையாறு அணை அதன் முழு கொள்ளளவான 160 அடியை இன்று மதியம் 2 மணி அளவில் எட்டியது. சோலையார் அணை நிறைந்து தண்ணீர் சேடல் அணைக்கட்டு வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒரே நாளில் இரண்டு அணைகள் நிரம்பியிருப்பதால் கோவை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  செய்தியாளர் சக்திவேல், பொள்ளாச்சி.
  Published by:Arun
  First published: