கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம் . ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு ஆளும் திமுக எம்.எல்.ஏ.க்களும் மேசையில் தட்டி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் செங்கோட்டையன் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “திராவிட இயக்கம் என்பதற்கு விளக்கம் தேவை. நானும் திராவிடன்தான். திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆளமுடியும். திமுக, அதிமுக வில் இருப்பவர்கள் எங்கள் உறவினர்கள்தான்.
நான் திராவிடன். பா.ஜ.கவினர் மண்ணை சார்ந்த தொழில் செய்கின்றோம். அதிமுக, திமுகவில் எவ்வளவு பேர் மண்சார்ந்த தொழில் செய்கின்றனர். துபாயில் , வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். வரும் 2026ல் தமிழகத்தில் 150 தொகுதிகளை பா.ஜ.க பிடிக்கும் . தமிழகத்தை சாராதவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்பதை வேண்டுமானாலும் ஏற்கலாம் . ஆனால் திராவிட இயக்கம்தான் ஆளும் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.
மேலும் படிக்க: பள்ளியில் மதமாற்றம்: அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக தலையிடும்.. அண்ணாமலை
மேலும், சட்டமன்றத்தில் தேவையில்லாத விவகாரங்களை பா.ஜ.கவினர் பேசுகின்றனர் என்று சொல்வதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, பா.ஜ.கவிற்கு பாடம் எடுக்க எந்த தகுதியும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. பீஸ்ட் ரெவியூ பார்த்தேன். நல்லா இருப்பதாக சொல்கின்றனர். சினிமாவில்
விஜய் நடிகராக பேசுகின்றார். ஏ.ஆர்.ரகுமான் அவருடைய படமாக தமிழன்னை படத்தை வெளியிட்டு இருக்கின்றார். கருத்து சுதந்திரம் அடிப்படையில் அவர் பதிவிட்டு இருக்கின்றார். எங்கள் எதிரி திமுக மட்டுமதான் என்று குறிப்பிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.