Home /News /tamil-nadu /

கோவையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த பூங்காகளில் மக்கள் கூட தடை!

கோவையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த பூங்காகளில் மக்கள் கூட தடை!

ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டனர்

ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டனர்

நாளை முழு ஊரடங்கு என்பதால்  விடுமுறையைக் கொண்டாட இன்றே பொதுமக்களில் பலர் வெளியில் வந்த நிலையில், மாநகராட்சியின் திடீர் உத்திரவினை தொடர்ந்து  காவல்துறையினர் பொதுமக்களை திரும்பி அனுப்பினர்.

  • News18
  • Last Updated :
    கோவையில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகரில்  உள்ள அனைத்து பூங்காகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களில் பூங்காகள் மாநகராட்சி தடைவிதித்துள்ளது. காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் முக்கிய இடங்களில் அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. கடந்த 10ம் தேதி 2895 பேருக்கு தொற்று இருந்தது. கடந்த 5 நாட்களில்  6328 ஆக கொரொனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

    தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் , கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ், பெரியகுளம், வாலாங்குளம், வ.உ.சி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள், நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு  செல்லவோ, அமர்ந்திருக்கவோ  மறு உத்தரவு வரும்வரை அனுமதி இல்லை என மாநகராட்சியின் சார்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கோவையில் கொரொனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்கும் விதமாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் , வ.உ.சி பூங்கா உட்பட நகரின் முக்கிய பகுதியில்  பொது மக்கள் கூடும் இடங்களிங்  காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

    Also read... கோவையில் மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்...!

    விடுமுறை தினம் என்பதால் இன்று பூங்காக்கள் மற்றும் நடைபயிற்சி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே கூடி இருந்த நிலையில், காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்து வெளியேறினர்.

    நாளை முழு ஊரடங்கு என்பதால்  விடுமுறையைக் கொண்டாட இன்றே பொதுமக்களில் பலர் வெளியில் வந்த நிலையில், மாநகராட்சியின் திடீர் உத்திரவினை தொடர்ந்து  காவல்துறையினர் பொதுமக்களை திரும்பி அனுப்பினர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி