• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் 

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் 

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் 

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் 

பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது தமிழகத்தை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எனவும் தனிப்பட்ட முறையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொங்கு மண்டலத்தை குறி வைத்து திமுக, பா.ஜ.க கட்சிகள் அரசியல் நகர்வுகளை செய்து வரும் வேளையில், அதிமுகவில்  ஜெயலலிதாவிற்கு மறைவிற்கு பின்னர் துரதிஷ்டவசமாக  மிக வலுவான தலைவரை அவர்களால்  மக்கள் மத்தியில் கொடுக்க முடியவில்லை எனவும், அந்த தலைவியின் முழு பலத்துடன் இது வரை பெற்ற வெற்றியை இனி அவர்கள் பெறுவார்களா என தெரியாது என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்றளவும் வலுவுடன் இருந்து வருகின்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை அதிமுக கொங்கு மண்டலத்தில்தான் கைபற்றியுள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் கட்சியினை வலுவாக்க திமுகவும் பா.ஜ.கவும்  தீவிர முயற்சிகளை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாகவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த கட்சி பிரமுகர்களுக்கு இரு கட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

பா.ஜ.கவில் ஏற்கனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்த தேசிய குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர்  வானதி சீனிவாசன், மாநில பொருளாளர், எஸ்.ஆர்.சேகர், தேசிய இளைரணி செயலாளர், ஏ.பி.முருகானந்தம், மாநில துணை தலைவர் பேராசிரியர் கனசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்,  என பெரிய பட்டியலே இருக்கின்றது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாநில தலைவர்   எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் , மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போலகொங்கு மண்டல திமுகவில் வலுவான தலைவர்கள் இல்லை என்பதை திமுக தலைமை  உணர்ந்திருக்கின்றது. திமுக சுற்றுசுழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும்  இதை ஒரு முறை தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார். கொங்கு மண்டலத்தில் வலுவான தலைவர்களை உருவாக்க திமுக முயன்று வரும்  நிலையில் ம.நீ.மவில் இருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகேந்திரன் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே திமுகவிற்கு  வந்திருந்தால் கூடுதல் இடங்களை பெற்றிருக்க முடியும் என திமுக தலைவர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்து இருந்தார். திமுக, பா.ஜ.க இரு கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் கவுண்டர் சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புகளை கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.

ஏற்கனவே பா.ஜ.கவில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இதே போல திமுகவில் கார்திகேய சிவசேனாதிபதியும் இணைந்தவுடன் அவருக்காகவே சுற்றுசுழல் அணி என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டது குறிப்பிட தக்கது. இந்த வரிசையில் தற்போது பா.ஜ.கவில் அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே பா.ஜ.க வலிமையாக இருக்கின்றது எனவும், புதிதாக வலிமைப்படுத்த வேண்டும் என்று  நினைத்து அண்ணாமலையை போடவில்லை எனவும் தெரிவித்தார். முருகனுக்கும், அண்ணாமலைக்கும் பதவி கொடுத்தது  ஏதேச்சையாக நடைபெற்றது என தெரிவித்தார்.

Also read: அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்!

திமுகதான் வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், மறுபடியும் வலுப்பெற வேண்டிய கட்டாயத்தில்  இருப்பதால் ஆட்களை தேடி கண்டுபிடித்து சேர்த்து வருவதாக தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் என்.கே.கே.பி ராஜா, மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற தலைவர்கள் இல்லாத நிலையினை இந்த தேர்தலில் உணர்ந்திருப்பதால், பலத்தை  உயர்த்தி கொள்ள வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பா.ஜ.கவில் முருகனுக்கும் அண்ணாமலைக்கும் பதவி கொடுப்பது தமிழகத்தை வலுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எனவும்  தனிப்பட்ட முறையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் இலக்கு எனவும், முழுமையான பலம் பெற்ற பின் தனி  பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என தெரிவித்த அவர், தமிழகத்தில் 45 வயதிற்கு உட்பட்ட  இளைஞர்கள் 65 சதவீதம் பேரை குறி வைத்து முருகனுக்கும் , அண்ணாமலைக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அருந்ததியினர் வகுப்பினருக்கு யாரும் இவ்வளவு அங்கீகாரம் கொடுத்ததில்லை நாங்கள் ஆங்கீகாரம் கொடுத்து இருக்கின்றோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள் என தெரிவித்தார்.

திமுக, பா.ஜ.க என்ற இரு கட்சிகளும் கொங்கு மண்டலத்தை குறிவைப்பது அதிமுக மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, அதிமுக, திமுக கட்சிகள் தனிமனித தலைவர் மத்தியில் வளர்த்த கட்சிகள் எனவும் ஸ்டாலின் வாரிசு என்பதால் திமுக தப்பித்துவிட்டது எனவும், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு மறைவிற்கு பின்னர் துரதிஷ்டவசமாக மிக வலுவான தலைவரை மக்கள் மத்தியில் கொடுக்க முடியவில்லை என தெரிவித்தார்.

Also read: வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு!

அந்த தலைவியின் முழு பலத்துடன் இதுவரை பெற்ற வெற்றியை இனி அவர்கள் பெறுவார்களா என தெரியாது. ஆனால் பா.ஜ.கவால் இளைஞர்களை கவர முடியும் எனவும் தமிழக அரசியலில்  இப்போது போட்டி பா.ஜ.க மற்றும் பா.ஜ.கவிற்கு எதிரான கட்சிகள் என்று மாறி இருக்கின்றது என தெரிவித்தார். கூட்டணி கட்சி என்பதால் அதிமுகவை  விமர்சனம் செய்யகூடாது என தெரிவித்த அவர்,  பெரிய தலைவியின்  மறைவிற்கு பின்னால் அவர்கள்  தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மை என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: