தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி செல்வபுரம் 78 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோமதி காட்டுதுரை என்ற பெண் வேட்பாளர் தனது வார்டில் ஹிஜாப் (Hijab) அணிந்து வாக்கு சேகரித்தார்.
அப்போது ஹிஜாப் அணிந்து குடியிருப்பு மற்றும் கடை தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், எனது வார்டில் பெரும்பாலும் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
Must Read : காசுக்காக பெட்ரோல் குண்டு வீசும் கருக்கா வினோத் - பின்னணியில் இருப்பது யார்?
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தார்.
செய்தியாளர் : சுரேஷ், கோவை தொண்டாமுத்தூர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.