Home /News /tamil-nadu /

எஸ்.பி.வேலுமணி உட்பட 8 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு...

எஸ்.பி.வேலுமணி உட்பட 8 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு...

கோவை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

SP Velumani உட்பட 8 அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் , அதிமுக நிர்வாகிகள் 14 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 8 அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் , கட்சி நிர்வாகிகள் 14 பேர் மீது  மூன்று பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடி வரி பாக்கி? - RTI மூலம் அம்பலம்

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுகவை விட காவல் துறையினரை அதிகமாக தாக்கிப் பேசினார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்ட விரோதமாக கூடி கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், முறையற்ற தடுப்பை ஏற்படுத்துதல், அனுமதி இன்றி ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்பும் விதமாக செயல்படுதல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Coimbatore, Crime News, Jayakumar, SP Velumani

அடுத்த செய்தி