Home /News /tamil-nadu /

குழாய் சண்டை: பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய பாஜக நிர்வாகி

குழாய் சண்டை: பொள்ளாச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய பாஜக நிர்வாகி

பொள்ளாச்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

    பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமபட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் பொன்னுச்சாமி. அதிமுக நிர்வாகியான இவர் ராமபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் வீட்டு இணைப்பிற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டுள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகன் என்பவரின் வீட்டு குடிநீர் இணைப்புக்கு குழாய் பதிக்கும் பணி, ஊராட்சி மன்ற செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி குழியை ஆழமாகத் தோண்டி குழாய் பதிக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் பாஜக நிர்வாகி ஜெகன் ஊராட்சி மன்ற தலைவர் பொண்ணுசாமி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஜெகன் பொன்னுச்சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்னுசாமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க : கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்... போக்சோவில் மனைவியுடன் சாமியார் கைது

    அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டதை அறிந்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பொன்னுச்சாமியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையும் படிங்க : தமிழ்நாடு முழுவதும் அதிரடி... ஆபத்தான பள்ளி கட்டடங்களை கண்டறியும் பணி தொடக்கம்

    இது தொடர்பாக பொன்னுச்சாமி பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க : விழுப்புரத்தில் கொடுமை... பசியால் தள்ளுவண்டியில் இறந்துகிடந்த 5 வயது சிறுவன்

    பொள்ளாச்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK, BJP

    அடுத்த செய்தி